யாக்கோபின் வரலாறு மனித பலவீனம் மற்றும் பாவத்தைக் குறித்த பதிவாகும். தன் சகோதரனாகிய ஏசாவை வஞ்சித்த யாக்கோபு ஆரானுக்குத் தப்பியோடினான் (ஆதியாகமம் 27:41-28:10). சில காலம் கழித்து யாக்கோபு தாயகம் திருமபினான். தன் சகோதரனாகிய ஏசாவின் ஊருக்குப் புறப்பட்டு, யாப்போக்கு என்ற ஆற்றின் துறையைக் கடக்கும்போது அவன் வாழ்வில் ஒர போராட்டம் ஏற்பட்டது..
இந்த வேத பகுதியில் பல ஆவிக்குரிய பயனான காரியங்களைக் காண முடிகிறது. 24வது வசனத்தில் “யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான்” என்று கூறப்பட்டுள்ளது. ஜெபத்தில் பிந்தித் தனித்திருப்பது (தனிமையான ஜெபம்) அவசியமானது. இதே போலொத்த உதாரணத்தை இயேசுவும் வெளிப்படுத்தினார். “அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார் (மத்.14.23). இயேசுவானவர் தனித்து ஜெபம் பண்ண தமது சீடர்களை அனுப்பிவிட்டார்.
நாம் கர்த்தரோடு உறவாடவே படைக்கப்பட்டிருப்பதால், அதில் மிகுந்த அக்கறை காட்டினால், அவருடைய பிரசன்னத்தை மட்டுமல்லாமல், வல்லமையையும் கூட்டிச் சேர்க்கிறது. தனது பெலவீனத்தில் மத்தியிலும் அவன் கர்த்தரோடு மல்லுக்கட்டினான். தனக்கு உண்டான காயங்களையும் வேதனைகளையும் வெளிப்படுத்தினான். யாக்கோபுவிற்குச் செவி சாய்த்தது போலவே, இயேசுவானவர் நமக்கும் வாஞ்சையோடு செவிசாய்க்கிறார். அவருக்கே மிகச் சரியான காரியம் தெரியும்.. நமது கவலைகளை அவரிடம் முறையிட்டால், கர்த்தர் நாம் செய்யவேண்டியதைக் காட்டுவதோடு, தம்மால் மட்டுமே ஆகக் கூடியத்தையும் வெளிப்படுத்துவார். நமது குழப்பத்தை அவர் புரிந்து வைத்திருக்கிறார். நமது குழப்பத்தை அவரிடம் ஒப்படைத்து விட்டு அவருடைய சமாதானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நமது கவலைகளை கர்த்தருடைய வல்லமையான கரங்களில் சமர்ப்பித்து விட்டால், அவரால் மட்டுமே வழங்கக்கூடிய சாந்தியை நாம் உணர்வோம்.
யாக்கோபு பிடிவாதமாய் இருந்தான். “நான் போகட்டும், பொழுது விடிகிறது” யாக்கோபு “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்”, என்றான். அவன் தனது விண்ணப்பத்தில் தெளிவாய் இருந்தான். அவன் ஆசீர்வாதத்தைக் கேட்டான்.
மீண்டும் யாக்கோபு பிடிவாதத்தைக் காட்டினான். “உமது பெயரைக் கூறும்” இந்த வேதப் பகுதியானது, “அங்கே அவனை ஆசீர்வதித்தார்” என்று கூறி முடிவடைகிறது (32.29). இறுதியில் கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். யாக்கோபு மன்னிக்கப்படுகிறான். தன் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டவனாய் அவன் தோன்றுகிறான். பாவ வாழ்வை விட்டு, விசுவாசத்தில் பணிவுடையவனாக மாறுகிறான்..
“.....நான் தேவனை முகமுகமாய்க கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன்” (32.30). என்று யாக்கோபு கூறுகிறான். எத்துணை அருமையான முடிவு….. “தேவனை முகமுகமாய் காண நாம் வாஞ்சிக்கிறோமா”?
தியானிக்கும் தருணம்
இந்த தபசு காலத்தில் தனிமையிலும் அசைவற்றும் இருக்க நேரத்தை ஒதுக்குவாயாக. ஜெபத்தில் பொறுமையாய் இருங்கள். யாக்கோபைப் போல் விண்ணப்பத்தில் தெளிவுடையவர்களாய் இருங்கள். “கர்த்தரை முகமுகமாய் காணும்” அனுபவத்தை நீங்களம் பெறக்கூடும்.
ஜெபங்கள்
கர்த்தாவே, நீர் என்னண்டை வருவதற்கு நான் பாத்திரன் அல்லன். ஆனால், நீர் வாக்கருளின படி, என் உள்ளத்தில் வாசம் செய்து, என் சரீரத்தைச் சுகப்படுத்தும், ஆமென்.
நாட்களை விசேஷித்துக் கொள்வதை வேதம் தடைசெய்யவில்லை. மனதின் நிலைமைக்கே நம் ஆண்டவர் பலனளிக்கிறார் என்ற வகையில் திருச்சபை உலகமுழுவதும் இணைந்து ஆசரிக்கும் இந்த தவக்காலத்தை நாமும் இயன்றமட்டும் நினைவுகூறுவோமாக. இதன் பலன் நம் வாழ்வின் துளிர்ப்பாகவும் நம்முடைய நம்பிக்கையின் உறுதியாகவும் மாறுவதாக.